விக்ரம் பட ஷூட்டிங் குறித்து வெளியான ரகசியங்கள்..!

 
விக்ரம்
காரைக்குடியில் நடைபெற்று வரும் விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாபெரும் படமாக மாறியுள்ளது. அதனால் படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முதல் காரைக்குடியில் ஆரம்பிக்கபப்ட்டுள்ள விக்ரம் பட ஷூட்டிங் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி இங்கு கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சில நாட்கள் இங்கு ஷூட்டிங் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து படக்குழுவினர் சென்னைக்கு செல்கின்றனர். அங்கு கமல்ஹாசன் மற்றும் ஃபகத் பாசில் சம்மந்தப்பட்ட காட்சிகள் செட் அமைத்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

From Around the web