ஜென்டில்மேன் நடிகை இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க...?

 
ஜென்டில்மேன் நடிகை இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்க...?

கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தில் சுகந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுபஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் எங்க தம்பி என்ற படத்தில் அறிமுகமானவர் சுபஸ்ரீ. இவர் பிரபல கன்னட நடிகை மாலாஸ்ரீயின் உடன்பிறந்த தங்கையாவர். பிறகு இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதை தொடர்ந்து முத்து, தாய் தங்கை பாசம், ஆறுசாமி போன்ற படங்களில் நடித்த சுபஸ்ரீ, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அதிகளவிலான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் 1996-ம் ஆண்டு வெளியான மைனர் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்தார்.

பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை தவிர்த்தார். தற்போதைய சூழலில் பலரும் நடிகை சுபஸ்ரீயை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவருடைய மூத்த சகோதிரி மாலாஸ்ரீ தற்போதும் பல்வேறு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது குடும்பத்தாருடன் மாலாஸ்ரீ எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில் நடிகை சுபஸ்ரீயும் உள்ளார். அவருடைய தற்போதைய தோற்றம் பல்வேறு ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் நடித்து வரும் போது மிகவும் ஒல்லியாகவும், குதூகல முகத்துடனும் தான் இருப்பார். ஆனால் இப்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இவரா ஜெண்டில்மேன் சுபஸ்ரீ என ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். 
 

From Around the web