இன்று வெளியாக இருக்கும் ஒற்றைப் பனைமரம் பட ரிலீஸுக்கு சீமான் கண்டனம்..!

ஈழத்தில் போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பித்து சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொள்ளும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக எடுத்து கூறுவதாக காணப்பட்டது பனைமரம்.படம்.
இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இயல்பாக காணப்பட்டதோடு இதில் நடித்தவர்களின் எதார்த்தமான நடிப்பும், காட்சி சித்தரிக்கப்பட்ட விதமும், இதயத்தை கணக்கு போக வைக்கும் திருப்பங்களுடன் கதைக்குள் ஆழமாக சென்று பார்ப்போரின் மனதையே நொறுங்க வைக்கும் அளவுக்கு காணப்பட்டது.
மேலும் 40 சர்வதேச பட விழாக்களில் பங்கு பற்றிய ஒற்றை பனைமரம் திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஒற்றை பனைமரம் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈழத் தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றைப் பனைமரம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்க கூடாது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதன்படி தாய் மண்ணின் விடுதலைக்கு போராடி தங்களது இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தை கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்பரப்பரையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.