சீனு ராமசாமி படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது!

 
1

 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.

சீனு ராமசாமியின் படங்கள் நேர்மறை எண்ணங்களையும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் ஊட்டுபவை. உறவுகளின் சிக்கல்களையும் சிக்கல்களை தாண்டிய முக்கியத்துவத்தையும் இவரது படங்களும் பாடல்களும் பேசியிருக்கின்றன. இவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இடம்பெற்ற 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது பெற்றார். அதன் பிறகு 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம்' பாடலுக்காக மீண்டும் தேசிய விருது பெற்றார் வைரமுத்து. முதல் பாடல் புழுதி பறக்கும் கிராமத்து கள்ளிக்காட்டு தாயின் பாசத்தை பாடியது. இரண்டாவது பாடல் திசை மாறிப் போன நல்ல நெஞ்சத்துக்கு நம்பிக்கை ஊட்டியது. 'கண்ணே கலைமானே' படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

1

மண் சார்ந்த யதார்த்தக் கதைகளை படைப்பதில் திறமையானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'கண்ணே கலைமானே' படம் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.

மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது. இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் (JIFF) இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும், ஃபீச்சர் ஃபிக்‌ஷன் பிரிவில் இந்தப் படத்திற்கு கெளரவ விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

From Around the web