காஞ்சனா 4-ம் பாகத்தில் ‘சீதாராமம்’ படம் நடிகை..?

 
1

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘காஞ்சனா’ படம் வெற்றிப் பெற்றதை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. ஹாரர், காமெடியில் உருவான இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது 4-ம் பாகம் உருவாகிறது. இந்தப் படம் பற்றி ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் முதல் பாகத்தில் ராய் லட்சுமியும், 2-ம் பாகத்தில் டாப்ஸி, நித்யா மேனன், 3-ம் பாகத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், 4-ம் பாகத்தில் மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமானார். அடுத்து விஜய் தேவரகொண்டாவின் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்திலும் நடித்திருந்தார்.

From Around the web