நிறைவு கட்டத்தில் பொன்னியில் செல்வன்- ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் குட்-பை..!

 
பொன்னியி
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டுள்ளன.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியர் நகரில் நடைபெற்று வருகிறது. படத்தில் நடித்து வரும் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட அனைவரும் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளன.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்பான காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய காட்சிகள் முடிக்கப்பட்டது குறித்து ஜெயம் ரவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதை டேக் செய்துள்ள நடிகர் கார்த்தி, இன்னும் ஓரிரு நாட்கள் தங்களுக்கான காட்சிகளும் முடிக்கப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்ததாக பூலோகம் கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
 

From Around the web