மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி- புலம்பும் தயாரிப்பாளர்கள்..!

 
மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி- புலம்பும் தயாரிப்பாளர்கள்..!

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி சம்பள உச்ச வரம்பு கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்களை கதி கலங்க வைத்துள்ளது.

விஜய் நடித்த படமாக மாஸ்டர் இருந்தாலும், பார்வையாளர்களுக்கு அந்த படத்தில் விஜய் சேதுபதியின் ஆதிக்கம் தான் தெரிந்தது. இந்த புகழை பயன்படுத்தி நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தை 8 மடங்காக உயர்த்தியுள்ளார்.

இது கோலிவுட் தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீரோவாக நடிக்க ஒரு சம்பளம், வில்லன் என்றால் அதற்கு தனி ரேட், குணச்சித்திர கதாபாத்திரம் என்றால் அதற்கு தனி காசு என பல்வேறு ஊதிய வரம்புகளை அவர் நிர்ணயித்துள்ளார்கள். இப்புதிய சம்பள தொகையை இறுதியான பின்பு தான் தற்போது நடிக்கும் படங்களுக்கு ஓகே சொல்லியுள்ளார். அதில் அடுத்ததாக ஹீரோவாக அவர் நடிக்கும் ஆறு படங்களுக்கு 10 முதல் 12 கோடி வரை அவர் சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக மாஸ்டர் படத்தில் வெறும் 30 நாட்களுக்குள் அவருக்கான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டன. இதில் டப்பிங் செய்த நாட்களும் அடங்கும். குறிப்பிட்ட இந்த நாட்களில் விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவருக்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 10 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ciniexpress.com

From Around the web