மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில் நடந்த சுயமரியாதை திருமணம்..!! 

 
1

நடிகர் விஜய்சேதுபதி முன்னிலையில், அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு சுயமரியாதை திருமணம் நடந்தது.இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J குமரன் என்பவர், சாதி மதம் கடந்து சுயமரியாதை திருமணம் செய்துகொண்டுள்ளார். இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மற்றும் அவரின் மனைவி ஜெசி முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம்.. என்பதை ரசிகர்கள் மத்தியில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்மன்றத்தின் பொதுச்செயலாளர் J குமரன், சாதி மதம் கடந்த, சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, இந்த திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கொண்ட இந்த திருவனத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தன்னுடைய மனைவி ஜெசியுடன் வந்து மணமக்களை ஆசீர்வதித்து முன்னின்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்.இது மக்களிடையே தீயாக பரவியுள்ளது..

இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாக, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

From Around the web