செல்வராகவன், தனுஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் விஜய் பட நடிகை..!!

 
தனுஷ் மற்றும் செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் விஜய் பட நடிகை கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் ஹிட் காம்போவாக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் செல்வராகவன் மற்றும் தனுஷ். உடன்பிறந்த சகோதரர்களான இவர்கள் கூட்டணி அமைத்து தயாராகும் படங்கள் அனைத்தும் மெஹா ஹிட் படங்கள் தான்.

அந்த வரிசையில் மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இணைந்து உருவாக்கும் படம் தான் ‘நானே வருவேன்’. இதற்கான டைட்டில் போஸ்டர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் ஷூட்டிங் துவங்கப்படவுள்ளது.

இந்நிலையில் நானே வருவேன் படத்தில் நடிப்பதற்கு இந்துஜாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் ஏற்கனவே விஜய்யின் பிகில், ஆர்யாவின் மகாமுனி போன்ற படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web