லெஜண்டு சரவணன் நடிக்கும் படத்தில் செல்வராகவன்..??
 

பிஸி நடிகராக மாறிவிட்ட இயக்குநர் செல்வராகவன், தான் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்து ட்விட்டரில் அறிவித்துள்ளார். அந்த ட்வீட்டை நடிகர் லெஜண்டு சரவணன் ரீட்வீட் செய்துள்ளார்.
 
legend saravanan

தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன், தற்போது பிஸி நடிகராக மாறிவிட்டார். அதேபோல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ‘லெஜண்டு’ சரவணன் அருள் வணிகத்தை ஓரங்கட்டிவிட்டு சினிமாவில் நடித்து வருகிறார்.

விளம்பர இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் உருவான ‘லெஜண்டு’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இதையடுத்து மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். எனினும் அவருடைய அடுத்த படம் தொடர்பான தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் தமிழில் திடீர் பிஸி நடிகராக மாறியுள்ள செல்வராகவன் புதியதாக ட்விட்டரில் ஒரு போஸ்ட் பதிவிட்டார். அதில். புஷ்பா வில்லன் சுனில் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி, அந்த படத்தை ஹரி கிருஷ்ணா தயாரிக்கிறார். ரங்கநாதன் என்பவர் இயக்குகிறார் என ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவனின் இந்த ட்வீட்டை லெஜெண்டு சரவணன் ரீட்வீட் செய்துள்ளார். இதனால் லெஜண்டு சரவணன் உடன் செல்வராகவன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அந்த படம் தான் ரங்கநாதன் இயக்கும் படம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தொடர்பாக லெஜெண்டு சரவணன் அல்லது செல்வராகவன் அறிவித்தால் தான் உண்மை நிலவரம் குறித்து தெரியவரும்.
 

From Around the web