இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் செல்வராகவன்..!!
Apr 21, 2023, 09:05 IST

மற்ற இயக்குனர்கள் யோசிக்கவே தயங்கும் கதைக்களங்களில் படங்கள் எடுத்து அப்போதைய தலைமுறையினரை வியக்க வைத்தார் செல்வராகவன்.
அப்படி அவர் இயக்கத்தில் வெளியானது தான் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம். 2004-ம் ஆண்டு ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான 7ஜி திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் மக்களின் ப்ளேலிஸ்ட்களை ஆட்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் 90’ஸ் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்.