தனுஷ் படத் தலைப்பு சர்ச்சைக்கு செல்வராகவன் பதிலடி..!

 
செல்வராகவன் மற்றும் தனுஷ்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் தனுஷ் படத் தலைப்பு மீது சர்ச்சையை எழுந்த நிலையில், அதற்கு சமூகவலைதளம் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

தமிழ் சினிமாவில் செல்வராகவன் - தனுஷ் கூட்டணிக்கு எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இவர்களுடைய கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வரிசையாக வெற்றி அடைந்து முத்திரை பதித்தன.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இந்த சகோதரர்கள் ஒரு படத்திற்கான ஒன்றிணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். முன்னதாக அறிவிக்கப்பட்ட படி படத்துக்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.ஆனால் சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில், தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ’ராயன்’ என தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் இதுதொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் புதியதாக தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குநர் செல்வராகவன், அந்த பதிவில் ‘நானே வருவேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் படத் தலைப்பு சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

From Around the web