நடிகர் சரத்பாபுவு மருத்துவமனையில் அனுமதி..!! ரசிகர்கள் பிரார்த்தனை..!!

பிரபல நடிகராக இருக்கும் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
sarath babu

ஆந்திரா பிரதேசத்தில் உள்ள அமதல்வல்சா மாவட்டத்தைச் சேர்ந்த சத்யம் பாபு தீக்‌ஷித்லு, கடந்த 1973-ம் ஆண்டு வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் பட்டின பரவேசம் படம் மூலம் சரத்பாபு என்கிற பெயரில் ஹீரோவாக அறிமுகமானார். 

ஆனால் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் குணச்சித்திர நடிகராக மாறினார். வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், சலங்கை ஒலி, முத்து போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, முன்னணி குணச்சித்திர நடிகரானார்.

தமிழ், தெலுங்கு உட்பட கன்னடம் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மூத்த நடிகை ரமா பிரபாவை 1974-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர், 1988-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். 

அதை தொடர்ந்து கடந்த 1990-ம் ஆண்டு ஸ்நேகா நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்ட சரத்பாபு, 2011-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இதையடுத்து சென்னையில் தனது பிறந்த வீட்டாருடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமா நடிகையான கல்யாணி, ”எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ சரத்பாபுவுக்கு உடல்நலன் சரியில்லை. சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் குணமடைய வேண்டிய இறைவனை வேண்டுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்டு அவரை பார்க்க சில பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web