விஜய் டிவியை விடுத்து வேறு டிவி தொடரில் களமிறங்கும் செந்தில் - ராஜலட்சுமி..!

 
செந்தில் மற்றும் ராஜலட்சுமி

விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான செந்தில், ராஜலட்சுமி இணை வேறொரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடரில் நடித்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி. மண்மனம் மணக்கும் கிராமிய பாடல்களை பாடி பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானவர்களாக மாறினார்கள்.

தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்று வந்தன. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல சீரியலில் நடித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கலர்ஸ்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இதயத்தை திருடாதே என்கிற தொடரில் சிறப்பு தோற்றத்தில் இருவரும் நடித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக அவர்கள் இருவரும் நடித்த தொடர் எபிசோட் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதற்காக இவர்கள் பாடல் பாட வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

From Around the web