சீரியல் நடிகர் பரபரப்பு பேட்டி...! என் முதல் கணவர் நல்லவர் தான்... ஆனால் 

 
1

‘நாதஸ்வரம்’ என்ற சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடித்த ஸ்ரீதிகா, அதன் பிறகு ’குலதெய்வம்’ ’மகராசி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார் என்பதும் சமூக வலைதளங்களில் அவர் பிரபலமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ரீதிகா, தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் சீரியலில் நடித்த ஆர்யன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் முதல் திருமணம் மற்றும் முதல் கணவர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய முதல் திருமணம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம், அவர் நல்லவர்தான் அவரிடம் எந்த குறையும் இல்லை, ஆனால் அதே நேரத்தில் எங்கள் இருவருக்கும் சில தவறான புரிதல் இருந்தன, எங்களுக்குள் சில விஷயங்கள் ஒத்துப் போகவில்லை, போகப் போக இந்த பிரச்சனைகள் சரியாகிவிடும் என்று நினைத்தோம், ஆனால் பிரச்சனைகள் பெரிதாகி கொண்டு வந்ததால், இருவரும் ஒரு கட்டத்தில் பேசி பிரிய முடிவு செய்தோம் என்று தெரிவித்தார்.



அதேபோல்  ஆர்யனுக்கும்   அவரது மனைவிக்கும் இடையே திருமணத்திற்கு பிறகு ஒத்துப் போகவில்லை என்றும் ஒரு கட்டத்தில் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் நானும் ஆர்யனும் ஒரே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தோம், எங்களை சுற்றி இருந்தவர்கள் மற்றும் எங்கள் பெற்றோர்கள் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? விருப்பப்பட்டால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதை அடுத்து நாங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் யோசித்து திருமணம் செய்து கொண்டோம்’ என்றும் அந்த பேட்டியில் ஸ்ரீதிகா தெரிவித்துள்ளார்.

From Around the web