நண்பனுக்காக ரவுடிகளிடம் சண்டை போட்ட சீரியல் நடிகர் சஞ்சீவ்..!
May 24, 2024, 11:05 IST
சஞ்சீவ் ஒரு சீரியல் நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும் படங்களில் இவர் நிறைய நடித்திருந்தாலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
வானத்தைப் போல தொடரில் நாயகனாக நடித்து வருபவர் தான் ஸ்ரீ. இவர் அண்மையில் நடிகர் சஞ்சீவ் குறித்தும் பள்ளி பருவத்தில் நடந்து ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.என்னை ஒருமுறை 20 அடியாக்கள் சுற்றுவிட்டார்கள், என்னால் 20 பேரை எப்படி தாக்குபிடிக்க முடியும். என்னை அவர்கள் அடிப்பதை தெரிந்தகொண்ட சஞ்சீவ் அங்கு வந்து அவர்களுடன் சண்டை போட்டார்.
ஆனால் இருவருக்கும் அதிகம் அடிபட்டுவிட்டது, அவர்கள் அருவாள், கொம்பு எல்லாம் வைத்திருந்தார்கள், பின்பு போலீஸில் புகார் அளித்தோம் என கூறியுள்ளார்.