வாய்ப்புகள் கிடைக்காததால் செல்போன் கடையில் வேலை பார்க்கும் சீரியல் நடிகர்..!

 
1

‘மெட்டி ஒலி’ ’நாதஸ்வரம்’ ’குலதெய்வம்’ ’கல்யாண வீடு’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியவர் திருமுருகன் என்பதும் இவர் சில படங்களையும் இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்தது.

குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு டீசண்டான சீரியல்களை இயக்குபவர் என்ற பெயர் பெற்ற திருமுருகன், தற்போது அடுத்த சீரியல் குறித்த கதை விவாதத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஒருவர் தற்போது சொந்த ஊரான தர்மபுரியில் செல்போன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்தான் காஜா ஃபெரோஸ்.

சின்ன வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், ’நாதஸ்வரம்’ சீரியல் ஆடிஷனுக்காக சென்ற நிலையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த சீரியலில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்தது மட்டுமின்றி சீரியல் முழுவதும் வரும் கேரக்டராகவும் மாற்றப்பட்டதால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


 

’நாதஸ்வரம்’ முடிந்ததும் திருமுருகன் இயக்கத்தில் உருவான அடுத்தடுத்த சீரியல்களில் எல்லாம் காஜா ஃபெரோஸ் நடித்தார் என்பதும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமுருகன் சீரியல் இயக்காத நிலையில் வேறு வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

5 வருடங்கள் நான் சீரியலில் நடித்திருந்தாலும் திருமுருகன் மற்றும் அவரது குழுவினரை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது, அதனால் சென்னையில் இருந்து கொண்டே வாய்ப்புகள் தேடுவதெல்லாம் எனக்கு செட்டாகாது, அதனால் சொந்த ஊருக்கு வந்து செல்போன் கடையில் வேலை பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

தற்போது திருமுருகன் அவர்கள் மீண்டும் சீரியல் எடுக்கப் போவதாக தகவல் வந்துள்ள நிலையில் கண்டிப்பாக என்னை அவர் ஞாபகம் வைத்து ஒரு கேரக்டர் வைத்திருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், அவரிடம் இருந்து போன் வரும் என்பதற்காக நான் காத்திருக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்

From Around the web