சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை..! சுஜிதா ஹோம் டூர் வீடியோவில் வேட்டை துப்பாக்கி..!  

 
1

 ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவும் ஒரு வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோவில் வேட்டை துப்பாக்கி இருந்ததை பார்த்து ரசிகர்கள் சர்ச்சையை எழுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுஜிதா விளக்கம் அளித்தது ’கோவை அருகே மருதமலை அடிவாரத்தில் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சமீபத்தில் சென்று இருந்ததாகவும் அந்த வீடு வனப்பகுதியில் மிகவும் அழகாக இருந்ததால் அந்த வீட்டில் ஒரு ஹோம் டூர் வீடியோ எடுக்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு தனது நண்பரும் அனுமதி அளித்ததை அடுத்து அந்த வீட்டை ஹோம் டூர் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவு செய்ததாகவும் அதில் இருந்த வேட்டை துப்பாக்கி தான் சர்ச்சைக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பகுதியில் இருப்பதால் எனது நண்பர் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்புக்காக அந்த துப்பாக்கியை வைத்துள்ளார் என்றும் அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் கூட தேவை இல்லை என்றும் ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் துப்பாக்கி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தேவையில்லாமல் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த சர்ச்சை குறித்து வனத்துறையினர் எங்களிடம் எந்தவித விசாரணையும் செய்யவில்லை என்றும் இது ஒரு தேவையில்லாத ஆணி என்றும் அவர் கூறியுள்ளார்.

From Around the web