பிரபல டிவி தொகுப்பாளரை கரம் பிடிக்கும் சீரியல் நடிகை கண்மணி..!
Jul 6, 2024, 07:05 IST
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ என்ற நெடுந்தொடரில் அஞ்சலி என்ற காதாபாத்திரத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் தான் நடிகை கண்மணி மனோகரன்.
திடீரென அந்த தொடரில் இருந்து வெளியேற கண்மணி ஜீ தமிழில் ஒளிபரப்பான ’அமுதாவும் அன்னபூரணி’ என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கினார்.
இந்நிலையில் நடிகை கண்மணி மனோகரன் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் பல தொகுப்பாளராக வலம் வரும் அஷ்வத் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது .
இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது .
இந்த இளம் ஜோடியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.