கழுத்தில் தாலியுடன் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..!
மதுரையை சேர்ந்தவர் கோமதி ப்ரியா.இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் வேலை செய்துள்ளார். அதன் பின் நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
அத்துடன் இவர் தெலுங்கிலும் 'ஹிட்லர் கேரி பெல்லம்' என்ற தொடரிலும் நடித்தார். அதன்பின் வேலைக்காரன் சீரியல் முடிவடையவே, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி மலையாளத்திலும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். அதிலும் ரொம்ப ஜாலியாக நடித்து வருவதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கோமதிப்பிரியா தற்போது, கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைய, இது வேறு சீரியலின் கெட்டப் புகைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.