ஆண்களை அனுப்பி கொடுமை செய்த சீரியல் நடிகை..!

 
நடிகை ஜெயலக்‌ஷமி
சென்னையை சேர்ந்த பெண்கள் சிலர் பிரபல சீரியல் நடிகை பி. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மீது காவல்துறையில் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் பி. ஜெயலட்சுமி. சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்து கட்சி செயல்பாட்டில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மீதும், சில வழக்கறிஞர்கள் மீதும் சென்னை பெண்கள் சிலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

அதில், பாதிக்கப்பட்ட பெண்கள் செம்பருத்தி என்கிற மகளிர் சுயக்குழு நடத்தி வருகின்றனர். அந்த குழுவின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக  மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ள உறுப்பினர் வங்கி கணக்கிலும், கொடுத்த தொகைக்கு பத்து பைசா என்ற வட்டியை எடுத்துக்கொண்டு மீதி தொகையை வங்கியில் அவர்கள் செலுத்தினார்கள். மேலும், அதற்காக ஒவ்வொரு நபர்களிடம் இருந்து அவரவர் வங்கி காசோலைகளை ஜாமினாக பெற்று வட்டிக்கு கொடுத்தனர்.

மாதம் மாதம் பணம் செலுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு அசல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேட்ட போது, பாதிக்கப்பட்ட பெண்களையும் வீட்டாரையும் கூண்டோடு அழித்து விடுவோம் என்று நடிகை ஜெயலட்சுமியும், அனகா மற்றும் சார்லஸ் என்கிற இரண்டு வழக்கறிஞர்களும் மிரட்டுகிறார்கள். அதனால் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web