சாவித்திரி தோற்றத்தில் கீர்த்தி சுரேஷை ஓரம் கட்டும் சீரியல் நடிகை..!

 
கீர்த்தி சுரேஷ்

நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த கீர்த்தி சுரேஷை சாவித்திரி தோற்றத்தில் ஓரம்கட்டியுள்ளார் பிரபல சீரியல் நடிகை.

சன் குழுமத்தின் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாழ்க்கையை துவங்கிய, யூ-ட்யூப் நிகழ்ச்சிகள் மூலம் கவனமீர்த்து, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அன்புடன் குஷி சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா வெங்கடேஷ்.

மறைந்த நடிகை சாவித்திரி கெட்-அப்பில் அண்மையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதை சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், “சாவித்திரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். சாவித்திரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் பலர், சாவித்திரி தோற்றத்தில் கீர்த்தி சுரேஷை ஓரம்கட்டிவிட்டார் ரேஷ்மா. பேசாமல் நடிகையர் திலகம் படத்தில் கீர்த்திக்கு பதிலாக இவர் நடித்திருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சாவித்திரி தோற்றத்தில் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web