தவமாய் தவமிருந்து சீரியல் ரீல் ஜோடி... இப்போ ரியல் ஜோடி ஆனது..! குவியும் வாழ்த்துக்கள் 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலின் மூலம் பிரபலமானவர் பிரிட்டோ. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாகவும் அதிகமான ரசிகர்களால் பாராட்டை பெற்று வரும் சீரியலாக ‘தவமாய் தவமிருந்து’ இருந்து வருகிறது. இந்த சீரியல் பல்வேறு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருக்கிறது. காரணம் பலருடைய வீட்டில் இந்த சீரியலில் நடப்பது போன்று தான் நடந்து வருகிறது. 

Brito-Sandhya

இந்த சீரியலில் மார்க்கண்டயன் குடும்பத்தின் தலைவராகவும் சீதா அவருடைய மனைவியாகவும் இருக்கிறார். அவருடைய குழந்தைகளாக ரேவதி, ரவி, ராஜா மற்றும் மலர் என 4 பேர் இருக்கின்றனர். அவர்களில் மலர் மார்க்கண்டேயன், சீதா சம்மதம் இல்லாமல் பாண்டியை காதலித்து திருமணம் செய்து விட்டார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் நன்றாக சென்றிருந்த நேரத்தில் இப்போது பாண்டி மற்றும் மலர் இடையே சண்டை போட்டு கோபத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று மார்க்கண்டேயன் நினைக்கிறார். மார்க்கண்டேயனுக்கு பிடித்த மருமகனாக பாண்டி இருக்கிறார்.

இந்த நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அதே பாண்டியும் மலரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர். பாண்டியாக நடிக்கும் பிரிட்டோவும் மலராக நடிக்கும் சந்தியாவும் நிஜத்தில் எங்கேஜ்மென்ட் முடிந்திருக்கும் செய்தியை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருப்பதாகவும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். 

இந்த ஜோடியின் எங்கேஜ்மென்ட் கடந்த மாதம் 25-ம் தேதி முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் தங்களுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை இவர்கள் இன்று தான் வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்து இருக்கிறது.

From Around the web