மீண்டும் ஒளிப்பரப்பாகும் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல்..!

 
உள்ளம் கொள்ளை போகுதடா சீசன் 2

தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ தொடர் மீண்டும் ஒளிப்பரப்பாகும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் பல்வேறு தொடர்கள் உருவாக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதற்கு இணையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்யப்படும் சீரியல்களும் ஒளிப்பரப்பாகி வருகின்றன.

குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள் இந்தி டப்பிங் தொடர்களை ஒளிப்பரப்பியதன் மூலமாக டி.ஆர்.பி-யில் முன்னிலை பெற்றன. இந்த டிரெண்ட் சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் அது துவங்கப்படுள்ளது. பாலிமர் தொலைக்காட்சியில் உள்ளம் கொள்ளை போகுதடா என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இந்தி டப்பிங் தொடர் மீண்டும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

அதாவது முன்னதாக ஒளிப்பரப்பான தொடரின் அடுத்த பாகமாக இது வரவுள்ளது. அதன்படி இந்த தொடருக்கு உள்ளம் கொள்ளை போகுதடா சீசன் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
 

From Around the web