இளைஞருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விநாயகன்- உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

விமானத்தில் உடன் பயணித்த சக பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகர் விநாயகன் மீது இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
vinayagan

மலையாள சினிமாவில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்தவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் விநாயகன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படங்களில் மட்டும் வில்லனாக நடிக்காமல், நிஜ வாழ்க்கையிலும் வில்லன் போலவே நடந்துகொள்வது விநாயகனின் வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் விநாயகன் மீது பாலியல் தொந்தரவு புகார் கூறினார். அப்போது பேசிய விநாயகன், இதுவரை நான் பதினேழு பெண்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளேன். என்னுடன் உறவுகொள்ள விரும்பும் பெண்களுடன் நான் செக்ஸ் வைத்துக்கொள்வதில் என்ன தவறு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் வாலிபர் ஒருவர் விநாயகன் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கூறியுள்ளது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்துள்ளது. கேராளவைச் சேர்ந்த அந்த வாலிபர், பஞ்சாபில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மே 27-ம் தேதி கோவாவில் இருந்து கொச்சிக்கு செல்ல விமானம் ஏறியுள்ளார். அவருடன் விநாயகன் சக பயணியாக பயணித்துள்ளார். அந்நேரத்தில் வாலிபரை பாலியல் ரீதியாக சீண்டியும், ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார் விநாயகன்.

இதுகுறித்து உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பயணிகள் விமானத்தை விட்டு இறங்கியவுடன், புகாரை ஏற்பது இல்லை என்று நிறுவனம் தெரிவித்துவிட்டது. அதையடுத்து விமானப் போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த வாலிபர் கேரள உயர்நீதிமன்றத்தில் விநாயகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து விநாயகனின் பாலியல் சீண்டல் தொடர்பான வழக்கை விசாரிக்க விமானப் போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி அந்த வாலிபர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web