காதலன் புகைப்படத்தை வெளியிட்ட ஷபானா- அடுத்ததாக டும்... டும்... டும் தான்..!

 
நடிகை ஷபானா

காதலரும் நடிகருமான ஆர்யனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு தன்னுடைய காதலை உறுதி செய்துள்ளார் டி.வி. நடிகை ஷபானா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்து மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றவர் ஷபானா. இவரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து அரும் ஆர்யனும் சேர்ந்து காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் அதை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். அப்போது நடிகர் ஆர்யன் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இருவரும் திருமண நிச்சயம் செய்துகொண்டதாக தெரியவந்தது.

எனினும் இந்த தகவலை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில்  பல வருட காதலுக்கு பிறகு முதன்முறையாக தனது காதலர் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் ஷபானா. அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

From Around the web