மெட்ரோ ரயில்நிலையத்தில் ஷாரூக்கான், நயன்தாரா- கசிந்த புகைப்படங்கள்..!

 
ஷூட்டிங்கில் ஷாரூக்கான் மற்றும் நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா நடித்து வரும் படத்தில் சில ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அட்லீ. விஜய் நடிப்பில் இவர் இயக்கி பிகில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் புனேவில் நடந்து வருகின்றன. இதில் தமிழ் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். அதன்படி மெட்ரோ நிலையம் ஒன்றில் பட ஷூட்டிங் துரிதமாக நடந்து வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளன. இன்னும் 6 மாதத்திற்குள் படத்தை எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்தாண்டு இந்த படம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web