மகளுடன் கைக்கோர்க்கும் ஷாரூக்கான் - விரைவில் அறிவிப்பு..!!
ஷாருக்கான் மற்றும் சுஹானா கான் நடிப்பில் வரவிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தை சுஜோய் கோஷ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஷாருக்கான் மற்றும் கௌரி கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சித்தார்த் ஆனந்தின் மார்பிலிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இப்படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நடப்பாண்டு முடிவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுஜோய் கோஷ் இயக்கத்தில் வெளியான கஹானி, கஹானி 2 மற்றும் பட்லா போன்ற படங்கள் பெரியளவில் வரவேற்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
சுஜோய் இதற்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸி நடிப்பில் வெளியான பட்லா என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்தது ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமாகும். தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்த குறிப்பிட்ட சில படங்களுக்கான கதைகளை இறுதி செய்வதிலும் சுஜோய் அங்கம் வகித்து வந்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத ஒரு ஆக்ஷன் படம் மற்றும் ஜோயா அக்தர் இயக்கும் தி ஆர்ச்சீஸ் என்கிற வலை தொடரில் சுஹானா கான் நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் ஏற்கனவே பிரபலமாகியுள்ளார். தற்போது ஷாரூக்கான் மற்றும் சுஹானா இணைந்து நடிப்பது படத்துக்கான வியாபாரத்தை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.