பிரபல பாலிவுட் இயக்குநர் படத்தில் ஷாரூக்கான் மற்றும் டாப்ஸி பன்னு..!

 
ஷாரூக்கான் மற்றும் டாப்ஸி பண்ணு
பாலிவுட் சினிமா கொண்டாடும் இயக்குநர் படத்தில் ஷாரூக்கான் மற்றும் டாப்ஸி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 இடியட்ஸ், பி.கே போன்ற தேசியளவில் கவனமீர்த்த படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், 2018-ம் ஆண்டு வெளியான ‘சஞ்சு’.  அதை தொடர்ந்து 3 ஆண்டுகளாக அவர் படம் இயக்காமல் உள்ளார்.

இந்நிலையில் முகேஷ் சோப்ராவுடன் இணைந்து அவர் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷாரூக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து அவர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி பன்னு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த தகவலை படக்குழு தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் இந்த படம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை குறித்த படமாக உருவாகவுள்ளது. அதன்படி படத்திற்கான 70 சதவீத படப்பிடிப்பு கனடா நடைபெறவுள்ளது. அதன்படி வரும் 2022-ம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web