ரகுல் ப்ரீத் சிங் வீட்டிற்கு வாடகைக்கு போகும் ஷாருக்கான்: ஏன் தெரியுமா?

 
1

மும்பை பந்த்ரா பாலி ஹில் பகுதியில் இருக்கும் பூஜா காசா அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு டூப்லெக்ஸ் வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார் ஷாருக்கான். அந்த வீடுகளின் மாத வாடகை ரூ. 24.15 லட்சம் மட்டுமே.


மூன்று ஆண்டுகள் தங்க ரூ. 8.7 கோடி செலவாகும். செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ. 68.97 லட்சம் கொடுத்திருக்கிறாராம் ஷாருக்கான்.ஷாருக்கானின் மன்னத்தின் பாதி அளவு கூட இல்லை பூஜா காசா அபார்ட்மென்ட்.மன்னத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பூஜா காசா அபார்ட்மென்ட்.


ஷாருக்கான் தன் குடும்பத்துடன் குடியேறும் பூஜா காசா அடுக்குமாடி குடியிருப்பு பாக்னானி குடும்பத்திற்கு சொந்தமானது. தயாரிப்பாளர் வாசு பாக்னானி, மகன் ஜாக்கி பாக்னானி, மகள் தீப்ஷிகா தேஷ்முக் தான் ஓனர்கள். பாக்னானி குடும்பமும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வருகிறது.ஜாக்கி பாக்னானி நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஆவார்.


2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 36 மாதங்களுக்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஸ்டாம்ப் டியூட்டியாக ரூ.2.22 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


பாலி ஹில் பகுதியில் தான் ஷாருக்கானின் நண்பர் ஆமீர் கான் வசித்து வருகிறார். மேலும் நடிகர் சஞ்சய் தத்தின் வீடும் அந்த பகுதியில் தான் இருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பாக்னானிகளின் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கப் போகிறார் ஷாருக்கான்.

இந்நிலையில் மன்னத்தின் சீரமைப்பு பணி மே மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் குடும்பம் மன்னத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் தங்கப் போகிறது.


கெரியரை பொறுத்தவரை பிசியாக இருந்து வருகிறார் ஷாருக்கான். அவரின் மூத்த மகன் ஆர்யன் கான் வெப்தொடரை இயக்கி வருகிறார். மகள் சுஹானா கான் நடிகையாகிவிட்டார். இளைய மகள் ஆப்ராம் அம்பானி பள்ளியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சொகுசு பங்களாவை காலி செய்துவிட்டு ரகுல் ப்ரீத் சிங்கின் மாமனாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு செல்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான். இனி மூன்று ஆண்டுகளுக்கு வாடகை வீட்டில் தான் குடும்பத்துடன் இருக்கப் போகிறார்.

From Around the web