ஷாரூக்கான் பெயரை தெருவுக்கு கொண்டு வரும் மகள் சுஹானா..!!

சினிமாவில் கால்பதிக்கும் முன்னரே எல்லை மீறிய கவரிச்சியை வெளிப்படுத்தி வருவதாக ஷாரூக்கானின் மகள் சுஹானா மீது பாலிவுட்டில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
suhana khan

இந்தி சினிமாவின் உச்சநட்சத்திரமான ஷாரூக்கான் மற்றும் கவுரி கான் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆர்யன் கான், சுஹானா கான் மற்றும் அப்ராம் கான். இதில் 23 வயதாகும் மகள் சுஹானா கான் விரைவில் சினிமா உலகில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளம் தயாரிக்கும் ‘தி ஆர்ச்சீஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை ஜோயா அக்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அமிதாப் பச்சன் பெயரன் அகஸ்தியா நந்தா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

முன்னதாக, சுஹானா கான் எப்போதும் சிம்பிளாகவும் சாதாரணமாகவும் ஆடை அணியக் கூடியவராக இருந்தார். ஆனால் அவர் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பதாக செய்தி வெளியானதில் இருந்து, அவருடைய தோற்றம், நடை, உடை எல்லாமே மாறிவிட்டது.

அண்மைக் காலமாக அது எல்லை மீறுகிறது என்றே சொல்லலாம். உடை அணிவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் இன்னும் சினிமாவில் முறையாக கால்பதிக்காத ஒருவர், பெரிய நட்சத்திரம் போல மிணுக்கிக்கொள்வது அவ்வளவு நல்லது கிடையாது என்பது பலருடைய கருத்தாக உள்ளது.

ஏற்கனவே பாலிவுட்டில் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து, புதியவர்கள் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஷாரூக்கான். அப்படிப்பட்ட ஒருவரின் மகள், அவருக்கே கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது அநாகரீகத்தின் உச்சம் என்று கருத்து பரவலாக எழுந்துள்ளது

ஒருவேளை சுஹானாவுக்கு ஃபேஷன் துறையில் ஆர்வமிருந்தால், பாரீஸ் சென்று பெருமை சேர்க்கலாம். இங்கு இருந்துகொண்டு மற்றவரின் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் வேலையை செய்யக் கூடாது. இந்தி சினிமா துறை முழுமையாக வாரிசுகள் கைகளில் சென்றால், உலக அரங்கில் இந்தியாவை அவர்கள் தவறாக சித்தரிக்கக்கூடும் என்கிற கருத்தும் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.

From Around the web