கடைசி ஆசையை சொன்ன ஷாருக்கான்!

 
1

பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டங்கி. படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இவர் இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பின் விருதைப் பெற்ற அவர், தன்னை விருதுக்கு தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.  நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு யாராவது ஆக்‌ஷன் சொல்ல வேண்டும். அப்போது நான் இறப்பது போல் நடிகக் வேண்டும். 

ஆனால், ஆக்‌ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது. நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் கனவு எனக் கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். இதன்மூலம் தனது தொழில் மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான காதல் தான் வெளிப்படுகிறது. இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது. 

From Around the web