வெப் தொடரில் நடிக்க வரும் ஷாரூக்கான் மகள்..!

 
சுஹானா கான்

இந்தியில் பிரபல பெண் இயக்குநர் இயக்கும் வெப் சிரீஸில் நடிகர் ஷாரூக்கானின் மகள் நடிகையாக அறிமுகமாகவுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு பல்லாண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த வரிசையில் எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து சூப்பர்ஸ்டாராக உயர்ந்த ஒரே நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். 

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இவருடைய மகள சுஹானா கான் விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதுதொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிசெய்யப்படாமல் இருந்தன.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஜோயா அக்தர் தயாரிக்கும் புதிய வெப் சிரீஸில் சுஹானா கான் நடிக்கிறார். அவருடன் சையீப் அலிகானின் மகன் இப்ராகிம், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த சீரிஸில் நடிப்பதற்கான சிறப்பு பயிற்சிகளில் சுஹானா கான் பங்கேற்று வருகிறார். முன்னதாக இவர் கரண் ஜோஹர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web