ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் வெளியீடு..!
Jul 26, 2024, 08:05 IST

நடிகர் ஷாருக்கானுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரிஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.
இந்த பெருமையை பெற்ற முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக்கான் பெற்றுள்ளார். தற்போது இந்த தகவல் படு வைரலாக பரவி வருகின்றது.
இதற்கிடையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் ஷாருக்கானின் உருவம் கொண்ட மெழுகு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு விழாவில் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.