இசையமைப்பாளராகும் ‘அக... நக..’ பாடகி..!!

சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்திற்கு பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
 
sakthisree gopalan

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படம் டெஸ்ட். இதி. மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிரபல பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். பாடகி ஒருவர் இசையமைப்பாளராக இடம்பெறுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக இளையராஜா மகள் பவதாரணி மற்றும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.


இதற்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சக்திஸ்ரீ கோபாலனுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளார். அதற்கு சக்தி ஸ்ரீ கோபாலனும் நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். ஒரு விளையாட்டு தொடர்பான படமாக உருவாகி வரும் டெஸ்ட் திரைப்படம் தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளிவருகிறது. 

From Around the web