‘தலைவா’ என்று கத்தியபடி மகனுடன் ‘அண்ணாத்த’ படத்தை கண்டுகளித்த ஷாலினி அஜித்!

சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1,100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்துள்ளது. அண்ணாத்தே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான திரையரங்குகளில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தை நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் கண்டுகளித்துள்ளார்.
நடிகை ஷாலினி தனது மகன் ஆத்விக் அஜித்துடன் சத்யம் சினிமாவில் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்துள்ளார். ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், திரையரங்கிலிருந்து ஷாலினி ஆத்விக்குடன் வரும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் படம் எடுத்துக்கொண்டு அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் வரும் காட்சிகளில் எல்லாம் ஷாலினி, தலைவா என்று கத்தியபடி படம் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.