20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் ஷாலினி..!

 
மணிரத்னம் மற்றும் ஷாலினி

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஷாலினி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக உயர்ந்தவர் ஷாலினி. குறிப்பாக மலையாள சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார். தமிழில் விஜய், பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே அதிக படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித்துடன் காதல் பிறந்தது. அவரை திருமணம் செய்துகொண்ட ஷாலினி சினிமாவை விட்டு விலகினார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இநிந்லையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் ஷாலினி. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலரும் நடிக்கும் இந்த படத்தில் ஷாலினி எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினி கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web