ராம் சரணை கைவிட்டு ரன்வீர் சிங்குடன் கைக்கோர்த்தார் ஷங்கர்..!

 
ராம் சரணை கைவிட்டு ரன்வீர் சிங்குடன் கைக்கோர்த்தார் ஷங்கர்..!

தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய அடுத்த படத்தை இந்தியில் தொடங்கவுள்ளதாக நடிகர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்திற்கான பணிகள் மீண்டும் எப்போது துவங்கும் என தெரியாத நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் தங்களுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூவுடன் இணைந்து ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஷங்கர் அறிவித்தார். அந்த படத்தின் நிலைகுறித்து எதுவும் தெரியாத நிலையில், தற்போது பென் மூவீஸ் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


தமிழில் அவர் இயக்கிய அந்நியன் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்காக தயாராகவுள்ளது. விக்ரம் நடித்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்த படத்தை பென் மூவீஸ் சார்பாக ஜெயந்திலால் கட்டா என்பவர் தயாரிக்கிறார். 

புதிய கதையமைப்பில் படத்தை இயக்க ஆர்வம் கொண்டிருந்த ஷங்கர், எதற்காக ரீமேக் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை. எனினும், புதியதாக இணைந்துள்ள இப்படக்குழுவினருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

From Around the web