இந்தியன் 2 பிரச்னை பேசினாலும் தீராது- உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் பதில் 

 
இந்தியன் 2 பிரச்னை பேசினாலும் தீராது- உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் பதில்

இந்தியன் 2 திரைப்பட விவாகாரத்தில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் இருக்கும் பிரச்னையில் சுமூக தீர்வு எட்ட முடியவில்லை என இயக்குநர் ஷங்கர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் விபத்து ஏற்பட்டது. இதில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் உட்பட மூன்று உயிரிழந்தனர். இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒராண்டுகள் கடந்த பின்பும் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

அதை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதனால் உடனடியாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் முடித்து தரவேண்டும் என்று கேட்டு உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம் ஷங்கர் தரப்பில் விளக்கம் கேட்டு உத்தரவிட்டது. 

இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதன்படி ஷங்கர் தரப்பில் ஆஜரான வக்கீல் வரும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்திற்குள் இந்தியன் 2 படத்தில் மீதமுள்ள காட்சிகளை ஷங்கர் எடுத்துவிடுவார். நீதிமன்றத்தில் ஷங்கர் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை லைகா நிறுவனம் திரும்ப பெற வேண்டும். இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக் இறந்துவிட்டதால், அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைத்து படமாக்கப்பட வேண்டும். இந்த விபரங்களை லைகா நிறுவனம் தனது மனுவில் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து வாதிட்ட லைகா நிறுவனத்தின் வழக்கறிஞர், இந்தியன் 2 பட இயக்கப் பணிகளுக்காக ஷங்கருக்கு ரூ. 32 கோடியை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது. அவருக்கு தர வேண்டிய மீதி தொகையை வழங்குவதற்கும் தயாராகவுள்ளது. திட்டமிட்டப்படி கடந்த மார்ச் மாதத்திற்கு படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்னைக்கு நீதிமன்றம் சுமூக தீர்வை எற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி இன்றைக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதன்படி, இன்று இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சுமூகப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இந்தியன் 2 படப்பிரச்னையை பேசி தீர்க்க முடியவில்லை என ஷங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் கூறும் படி ஜூன் மாதத்தில் இந்திய 2 படத்தை முடித்துக் கொடுக்க முடியாது. அக்டோபர் மாதத்திற்கு நிச்சயம் முடிக்க முடியும் என ஷங்கர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. 

From Around the web