இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகளை ரீ-ஷூட் செய்ய ஷங்கர் முடிவு..!
 

 
இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகளை ரீ-ஷூட் செய்ய ஷங்கர் முடிவு..!

இந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்துள்ள காட்சிகளை மீண்டும் படமாக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒராண்டுக்கும் மேலாகிவிட்டது. மீண்டும் எப்போது இதனுடைய ஷூட்டிங் பணிகள் துவங்கும் என்பது தற்போது வரை தெரியவில்லை.

சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி, இந்தியன் 2 படத்தின் விவேக் தொடர்பான காட்சிகளை மீண்டும் எடுக்க ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக நகைச்சுவை நடிகராக கோலோச்சி வந்த விவேக் இதுவரை கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார்.

அவருடைய நெடுங்கால கனவு இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. ஆனால் அது நிஜமாவதற்குள் எதிர்பாராத விதமாக விவேக் மாரடைப்பால் காலமானார். இதனால் இந்தியன் 2 உட்பட அவர் நடித்து வந்த படங்கள் நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

அந்த படத்தின் விவேக் தொடர்பான காட்சிகள் இன்னும் முடிவடையாததால், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரீ-ஷூட் செய்ய ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விரைவிலேயே அவருக்கு மாற்றாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகீறது.

முன்னதாக இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக்கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து. ஆனால் இதை விசாரித்த நீதிமன்றம் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ள அறிவுரை வழங்கி வழக்கை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 படம் மூலம் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த படம் தொடர்ந்து 4 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. முதன்முறையாக ஷங்கர் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுக் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web