இன்று முதல் ஆரம்பம்பமாகும் ஷங்கர் - ராம் சரண் படம்..!

 
ஷங்கர் மற்றும் ராம் சரண்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

தமிழில் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் பாதியில் நின்றுவிட்ட நிலையில், எப்போது ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரண் மற்றும் இந்தியில் ரன்வீர் சிங் ஆகியோருடன் படங்களை இயக்க ஷங்கர் கமிட் செய்து வைத்துள்ளார்.

அவற்றில் முதலாவதாக ராம் சரண் நடிக்கும் படம் துவங்குகிறது. அதற்கான ஷூட்டிங் பணிகள் இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக ராம் சரண் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படம் வரும் அக்டோபர் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web