ஷங்கர் - ராம் சரண் படம் பூஜையுடன் தொடக்கம்..!

 
படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர்
தமிழ் மற்றும் தெலுங்கில் ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

இந்தியன் 2 படத்திற்கான பணிகள் தோய்வு அடைந்துள்ள நிலையில், தற்போது ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார்.

பல மாதங்களாக இதனுடைய திரைக்கதை பணிகள் நடந்து வந்தன. இதையடுத்து நேற்று இந்த படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. ஹைதராபாத்தில் பிரமாண்டமாக இப்பட பூஜை நடந்தது.

அதன்படி, இயக்குநர் ஷங்கர், ஹீரோ ராம் சரண், கதாநாயகிகள் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி, பாடலாசிரிய விவேக், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் தெலுங்கு சினிமா உச்சபச்ச நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமவுலி, இயக்குநர் லிங்குசாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் பூஜையில் கலந்துகொண்டனர்.

இந்த படத்தை அடுத்து தமிழில் வெளியான அந்நியன் பட ரீமேக்கை இந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர். அந்த படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். அவரும் இந்த பட பூஜையில் படக்குழுவினர் பங்கேற்றார்.

இன்று முதல் தொடங்கும் படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. அதற்காக ஹைதராபாத் ஃப்லிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்படவுள்ளது. இந்த படம் நேரடியாக தமிழிலும் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web