ஷங்கர் - ராம் சரண் படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

நடிகர் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஆர்.சி. 15 படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
ram charan

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ராம் சரண் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடலுக்கான பிரிவில் அப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு... நாட்டு..’ பாடல் விருது வென்றது. 

இதையடுத்து ராம் சரண் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாகவும் அஞ்சலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


இன்று ராம் சரண் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு படக்குழு ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கான டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்துக்கு ‘கேம் சேஞ்சர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இதுவொரு சமகால அரசியல் பின்னணியில் உருவாகும், ஒரு அதிரடி கதையம்சம் கொண்ட படமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.
 

From Around the web