தன்னுடைய படத்தில் நடித்தவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த ஷங்கர்..!

 
இசையமைப்பாளர் தமனுடன் ஷங்கர் மற்றும் ராம்சரண்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த தமன், அடுத்து அவர் இயக்கும் தெலுங்குப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இதில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தமன். பின்நாளில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா கொண்டாடி வரும் இசையமைப்பாளராக உருவானார்.

இவருடைய இசையில் சமீபத்தில் வெளியான ‘அலா வைகுந்தபுரம்லோ’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற பாடல்கள் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த பாடல்களுக்கு இன்னும் வரவேற்புள்ளது.

இதனால் தெலுங்கு சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக மாறியுள்ளார் தமன். இவர் அடுத்ததாக ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவில் தன்னை நடிகராக அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் படத்திற்கு  இசையமைப்பாளராக பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தமன் தெரிவித்துள்ளார்.

From Around the web