சிம்புக்கு ஜோடி ஷங்கரின் மகள் அதிதி ?

'மாநாடு' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில், சிம்பு நடிக்கவுள்ள கொரோனா குமார் படம் குறித்து தற்போது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன்.மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் எம்.பி.பி.எஸ் முடித்திருக்கிறார்.படித்து முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சூர்யா தயாரிப்பில் கார்த்தி- முத்தையா 'விருமன்' படத்தில் தான் பிரமாண்ட திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகியமாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.