சண்முக பாண்டியனின் படைத்தலைவன் ரிலீஸ் அப்டேட்..!

விஜயகாந்தின் 72வது பிறந்தநாளான இன்று (ஆக.25), தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் கண்ணீருடன் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின், விஜயகாந்துடன் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வந்தார். ஆனால், அப்படம் தேர்தல், விஜயகாந்த் மறைவு ஆகிய காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.