கத்ரீனாவை முத்தமிட தயங்கினேன்- ஓபனாக பேசிய ஷாரூக்கான்..!!

காதல் நாயகனாக இந்திய சினிமாவில் வலம் வரும் ஷாரூக்கான், கத்ரீனாவை முத்தமிட தயங்கியது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலை கிளப்பியுள்ளது.
 
Shahrukh-Khan

இந்தியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஷாரூக்கானின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தன. எனினும் நடப்பாண்டில் வெளியான பதான் படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து தோல்விப் படங்களை அளித்து வந்த பாலிவுட்டுக்கு, இது புத்துயிரை அளித்தது. இப்படம் உலகம் முழுவதும் பல கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் சுல்தான் ஷாரூக்கான் தான் என்பது மீண்டும் உறுதியானது. 

ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்துக்கு வேண்டி ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழ் இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஷாருக் இரட்டை வேடத்தில் தோன்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

katrina kaif

கடந்த 2012-ம் ஆண்டு ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படம் ஜப் தக் ஹை ஜான். இதில் கதாநாயகிகளாக கத்ரீனா கைஃப் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடித்தனர். இப்படத்தின் ஷாரூம் மற்றும் கத்ரீனாவுக்கு இடையில் மிகவும் ரொமேன்ஸ் காட்சிகள் உள்ளன. ஆனால் இதில் விருப்பமில்லாமல் தான் ஷாரூக்கான் நடித்ஹ்துள்ளார். கத்ரீனாவை முத்தமிட விருப்பமில்லாமல், அந்த முடிவில் இருந்து அவர் பின் வாங்கினார். ஆனால் இறுதியில், ஷாருக்கான் திரையில் முத்தமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தவிர்க்க முடியாமல், இறுதியாக ஒப்புக்கொண்டார் ஷாருக்கான்!

sharkuh khan

இதற்காகவே ஷாரூக்கானுக்கு பெருந்தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. திரையில் முத்தக் காட்சியில் நடிக்க விருப்பமில்லாமல் ஒப்புக்கொண்டதாக ஷாரூக்கான் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. எனக்கு பிடிக்காவிட்டாலும் இந்த காட்சியை நான் செய்ய நேர்ந்தது என்று ஷாருக் கூறினார். இந்தக் காட்சிக்காக நான் நிறைய சம்பளம் வாங்கினேன் என்றும் ஷாருக் வெளிப்படையாகக் கூறினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் இந்திய புள்ளிவிவரங்களின்படி, படத்தின் பட்ஜெட் 78 கோடி. ஆனால் ரிலீஸான ஒரே வாரத்தில் படம் ரூ. 210 கோடி கலெக்‌ஷன் செய்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web