ஒருவழியாக திருமணத்தை முடித்த ஹீரோ..!! யாரு கண் பட்டதோ..!!

பிரபல நடிகர் ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ரெட்டியின் திருமணம் தெலுங்கு முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்தது.
 
sharwanand

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் ஷர்வானந்த். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவர், அந்த படத்துக்கு பிறகு தமிழிலும் பிஸியானார். சேரன் இயக்கத்தில் வெளியான ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களில் நடித்தார். 

இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ரக்‌ஷிதா ரெட்டி என்பவருக்கும் 2021-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகி பல மாதங்கள் கடந்த பின்னரும், இருவருக்கும் திருமணம் நடைபெறாமல் இருந்தது. இதனால் ஷர்வானந்த்ஹ் திருமணம் நின்றுபோய்விட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஷர்வானந்த் குடும்பத்தினர், கொரோனா பிரச்னை காரணமாக திருமண ஏற்பாடுகள் தாமதமடைந்தன. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டனர். அதன்படி ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதாவின் திருமணம் ஜூன் 4-ம் தேத்ஹி ஜோத்பூரில் நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் திருமணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னர் ஷர்வானந்த் சென்ற கார், ஹைதராபாத்தில் ஒரு தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், அவர் காயங்களின்றி உயிர் தப்பினார். இதையடுத்து திருமணம் நின்றுபோய்விட்டதாக மீண்டும் செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு கூறி ஷர்வானந்த் நிச்சயம் திட்டமிட்டபடி திருமணம் நடக்கும் என்று கூறினார்.

அதன்படி கடந்த 4-ம் தேதி ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ரெட்டியின் திருமணம் ஜோத்பூரில் திட்டமிட்டபடி நடந்தது. தெலுங்கு முறைப்படி நடந்த திருமணத்தில் மணமக்கள் ராஜஸ்தான் பாரம்பரிய உடையில் காணப்பட்டனர். அவர்களுடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
 

From Around the web