ஷபானாவுக்கு பதில் இந்த சீரியலில் நடிக்க இருக்கும் நடிகை இவர் தான்..!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று ’மிஸ்டர் மனைவி’ என்பதும் இதில் ஷபானா, அஞ்சலிதேவி கேரக்டரிலும் பவன் ரவீந்தரா, விக்னேஷ்வர் கேரக்டரில் நடித்து வந்தார்கள் என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த இந்த சீரியல் ஒரு வருடத்தை கடந்து விட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென ஷபானா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுகிறேன் என்ற காரணத்தை ஷபானா கூறவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுகிறேன் என்றும் அஞ்சலி கேரக்டரில் நான் நடிக்காமல் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் இருப்பினும் இந்த கேரக்டரில் நடிக்க வரும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது ’மிஸ்டர் மனைவி’ அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருப்பது தேப்ஜானி என்பது தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான ’ராசாத்தி’ என்ற சீரியலில் பாவனி ரெட்டிக்கு பதிலாக நடித்தவர் என்பதும் தற்போது ’மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஷபானாவுக்கு பதிலாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் இவருக்கு பதில் இவர் என்று ஷபானாவுக்கு பதிலாக தேப்ஜானி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.