நாட்டாமை படத்துல பொண்ணு பார்க்குற சீன்ல வர பொண்ணா இவங்க..! மகனுடன் எப்படி இருக்காங்கனு பாருங்க!!
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமாரின் இரட்டை வேடம் நடிப்பில்,வெளியான திரைப்படம் தான் நாட்டாமை. இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதில் கவுண்டமணி செந்தில் காமெடி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு காமெடி தான் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் தருணம். இதில் பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிச்சர் சாப்பிடுவதை கவுண்டமணி கிண்டல் செய்வது இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
மேலும் அந்த காமெடியில் வரும் பெண் இப்போது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது அந்த நடிகையின் பெயர் கீர்த்தி நாயுடு. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கீர்த்தி நாயுடு தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கா என வியந்து பார்க்கின்றனர்.

 - cini express.jpg)